நெல்லை மேயர் கொலை வழக்கு! சிறை அறையில் உளவாளி! 3 மாதத்திற்கு பிறகு சிக்கிய திமுக சீனியம்மாள்! அதிர்ச்சி காரணம்!

திருநெல்வேலி: முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த சீனியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. திருநெல்வேலி  புறநகர்ப்பகுதியில் வசித்து வந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் கடந்த ஜூலை மாதம் கத்தியால் குத்திக் கொன்றனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீஸ்க்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன் அடிப்படையில் திமுக பிரமுகரான சீனியம்மாள் என்பவரையும், அவரது மகன் கார்த்திக் ராஜாவையும் போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.  

இதில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சீட் வாங்கி தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு உமா மகேஸ்வரி ஏமாற்றியதாகவும், இதனால் அதிருப்தி அடைந்த சீனியம்மாள் கூலிப்படை வைத்து அவரை கொன்றுவிட்டதாகவும் தெரியவந்தது. ஏற்கனவே, சீனியம்மாள் மகன் கார்த்திக் ராஜாவை கைது செய்துள்ள போலீசார், இதற்கு கூடுதல் சாட்சி ஏதும் கிடைக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மூன்று மாதங்கள் கடந்தபின், தற்போது பொறுமையாக சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.  

குற்றவாளி இவர்தான் என தெளிவாக தெரிந்தபிறகும் இவ்வளவு காலதாமதம் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்ட விவகாரம் பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.