முதலில் மகள்! பிறகு தாய்! தற்போது தந்தை! 3 பேர் அடுத்தடுத்து மர்ம தற்கொலை!

திருவள்ளூர் அருகே மகள் மற்றும் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் மனமுடைந்த கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர், பொன்னேரி அடுத்த பெரும்பேடு பகுதியை சேர்ந்த குமாரின் மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் ஏற்பட்ட சோகத்தை தாங்க முடியாமல் குமாரின் மனைவி சுமதியும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக, தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

உடனடியாக மீட்கபட்ட சுமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கபட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே சமயத்தில் மகளையும், மனைவியையும் ஒருசேர இழந்த குமார் மன உளைச்சளினால் செய்வதறியாது, அந்த பகுதியில்  ஏரிக்கரை ஓரமாக மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்த , பொன்னேரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த ஆறு மாதத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதன் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்