உயிர் தப்பிய நயினார்!படையெடுக்கும் இந்து அமைப்புகள்! கலவர தொகுதியாகும் ராமநாதபுரம்!

ராமநாதபுரத்தில் பா.ஜ., வேட்பாளர் நயினார்நாகேந்திரன் மீது சோடா பாட்டில் வீசப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு முன்னரே மதக் கலவர அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.


குட்டி பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பெரியபட்டினம், ராமநாதபுரம் தொகுதிக்குள் வருகிறது. இது முழுக்க முழுக்க முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி. இங்கு பல்வேறு முஸ்லீம் அமைப்புகளுக்கும் செல்வாக்கு இருக்கிறது. 2014 தேர்தலில் கல் வீச்சு பரபரப்பு ஏற்படுத்திய தொகுதி இது.


இந்த நிலையில் திங்களன்று ராமநாதபுரம் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெரியபட்டினத்துக்கு பிரசாரத்துக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., மற்றும் பலர் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக நயினார் நாகேந்திரன் மீது சோடாபாட்டில் வீசப்பட்டது. ஆனால், அது ஜீப்பின் மேல்புற கம்பியில் விழுந்து கீழே நின்ற திருப்புல்லாணி அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் உடையப்பதேவரின் தலையைப் பதம் பார்த்தது.


உடனடியாக உடையப்பத் தேவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு பெரியபட்டினத்திலுள்ள எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்தான் காரணம் என்று பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும் புகார் கொடுத்துள்ளனர். அந்த பாட்டில் நேரடியாக நயினார் நாகேந்திரன் மீது விழுந்திருந்தால் உயிருக்கே ஆபத்தாகப் போயிருக்கும் என்று கட்சியினர் டென்ஷன் ஆகிறார்கள். அது மட்டுமின்றி இந்த சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் துடிக்கிறார்கள்.


அதனால் மீண்டும் பெரியபட்டினத்துக்கு நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்குப் போகவேண்டும் அவருக்கு நாங்கள் பாதுகாப்பாக நாங்கள் கூடவே வருவோம் என்று பல்வேறு இந்து அமைப்பினரும் டென்ஷன் ஆகிவருகிறார்கள்.

இதைக் கேள்விப்பட்டு இஸ்லாமியர்கள், வேறு தொகுதியில் இருந்து யாரேனும் உள்ளே நுழைந்தால் காலை வெட்டுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.


தேர்தலுக்குள் நிச்சயம் குத்து, வெட்டு நடக்கும் என்று உள்ளூர் மக்கள் அலறுகிறார்கள். உடனே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியைக் கொண்டுவாங்கப்பா...