கல்யாணத்துக்கு முன்பே க்ரீக் தீவில் தேனிலவு! எவ்வளவு அவசரம்!

தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்படும் காதல் ஜோடிகளின் முன்னணியில் இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆவார்.


தமிழ் திரையுலகின் முன்னணி  நடிகை மற்றும் லேடி சூப்பர்ஸ்டாராக திகழும் நயன்தாரா,  இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயத்தாராவின் நடிப்பில் வெளிவந்த "நானும் ரவுடி தான்" காமெடி திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.  இந்த திரைப்படடி இயக்குனர் விகேஷ் சிவன் இயக்கினார்.  இந்த படத்தில் நடிக்கும் போது  தான் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.  இதுவரை இவர்கள் இருவரும் தாங்கள் காதலிப்பதாக பகிரங்கமாக தெரிவிக்க வில்லை. 

இருப்பினும் இவர்கள் உலகில் சுற்றாத இடங்கள் இல்லை  என்றே கூறலாம். எப்போதும் இந்த ஜோடியானது தங்களுடைய விமுறை நாட்களை பல்வேரு நாடுகளில் கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டவர்கள் என்பது நாம் அறிந்ததே..

சமீபத்தில் விக்னேஷ் சிவன் சன்டோரி செல்வதற்கான விமான பயண சீட்டை விடியோவாக பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சன்டோரி என்பது ஹனீமூன் செல்வதற்கான உகந்த இடம் ஆகும்.  இப்போது நயனும் விக்னேஷ் சிவனும் இணைந்து அந்த இடத்திற்கு தான் செல்ல உள்ளனர்.

இதன் மூலம் நயன் விக்னேஷ்சிவன் இருவரும் அடுத்த ரொமான்டிக் ட்ரிப்க்கு தயாராகிவிட்டனர் என்பது தெளிவாக தெரிகிறது. இதை பார்த்த இவர்களது ரசிகர்கள் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.