மேக்கப் போடாமலே நடிகைகள் போல மின்னும் பொலிவை பெற இயற்கையான சில வழிகள்!

மேக்கப் போடாமலே இயற்கையாக முகம் நடிகைகள் போல ஜொலிக்க வேண்டுமென்றால் இயற்கையான இந்த முறைகளை செய்தாலே போதும்.


ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்துகொள்ளுங்கள். தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்துகொள்ளுங்கள். இதனால் மேக்கப் போடாமலும் அழகாக தெரிவீர்கள்.

ஃபேஸ் கிளின்சராக தயிர் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து பயன்படுத்துவாராம். தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கிவிடும்.

*தினமும் குறைந்தது 6-8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். * குறைந்த அளவில் மேக்கப் போடுவதோடு, தூங்குவதற்கு முன் மேக்கப் முழுவதையும் நீக்க மறக்க வேண்டாம். * சருமத்தைப் பராமரிக்க ஹெர்பல் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும். * சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக நேச்சுரல் ஃபேஸ் பேக் அல்லது மாஸ்க் பயன்படுத்தவும்.