ஜப்பான்! பிரான்ஸ்! அமெரிக்கா! மோடி உலக சுற்றுப்பயணம் ஆரம்பம்!

பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மோடி தலைமையிலான பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க உள்ளது. வரும் மே 30ம் தேதியன்று, மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அவர் அடுத்த 6 மாதங்களுக்கு, எந்தெந்த நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

இதன்படி, ஜூன் 13ம் தேதி முதல், 15 வரை கிர்கிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர், ஜூன் 28 மற்றும் ஜூ 29 தேதிகளில் ஜப்பான் சென்று ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்ட் மாத இறுதியில் ஃபிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம்  செல்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவிற்கு அவர் செல்ல உள்ளார். அதே மாதத்தின் பிற்பகுதியில் அமெரிக்கா செல்கிறார். நவம்பர் மாதத்தில்  தாய்லாந்து மற்றும் பிரேசில் நாடுகளுக்கும் மோடி செல்ல உள்ளதாக, தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில், அதிகப்படியான வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர் மோடி. இதற்காகவே எதிர்க்கட்சிகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட அவர், தற்போது இன்னும் பிரதமராகவே பதவியேற்கவில்லை. அதற்கு முன்பாகவே, வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்ட விசயம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதவிர, மோடி உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களின் வெளிநாட்டு பயணத்திற்காக, 2 புதிய போயிங் விமானங்களை மத்திய அரசு வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.