கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதான்…!

பெரிய தொழில் அதிபர்கள் அவங்களோட கார்ப்பரேட் கம்பெனி பேர்ல பேங்க் நடத்த அனுமதிக்கலாம்னு ரிசர்வ் பேங்க் சிபாரிசு செய்திருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் அவர்களின் பதிவு இது.


அரசு என்ன விரும்புதோ அத செஞ்சு குடுக்றது கடமைனு ரிசர்வ் பேங்க் செயல்படுது. அதனால, இந்த சிபாரிசும் அரசோட விருப்பத்த எதிரொலிக்றதா எடுத்துக்கலாம்.

அரசுக்கு ஏன் இப்டி ஒரு திடீர் ஆசை? ஏன்னா, கார்ப்பரேட் முதலாளிகள் பலரும் பேங்ல வாங்கின கடன திருப்பி குடுக்கல. அதனால பல பேங்குகள் திவால் ஆகுற நிலைமைக்கு வந்திருச்சு. அதுங்கள காப்பாத்த அரசாங்கம் அள்ளி அள்ளி குடுக்க வேண்டி இருக்கு. மக்களோட வரி பணத்ல இருந்து. 

இன்னொரு பக்கம் பாத்தா, பேங்க் மேல நம்பிக்கை வச்சு ஜனங்க டெபாசிட் பண்ண பணத்த கடனா வாங்கின கோடீஸ்வரங்க ஃபாரின் போய் செட்டில் ஆயிட்டாங்க. அந்த நாடுகளோட சட்டங்கள மீறி அவங்கள கைது செஞ்சு இங்க கூட்டீட்டு வர முடியல. 

இப்படி ரெண்டு பக்கமும் அரசுக்கு கெட்ட பேர் உண்டாகுது. கெட்ட பேர் வர்றத எந்த அரசும் விரும்பாது. அதும் போக, எந்த தொழில்லயும் இடை தரகர்கள் செயல்பட்றத அரசாங்கம் விரும்பல. ஜனங்க பேங்ல பணம் போட்றாங்க; பேங்க் அத பெரு முதலாளிகளுக்கு குடுக்குது; அவங்க ஏப்பம் விடறாங்க. நம்ம எதுக்கு நடுவுல நின்னு கெட்ட பேர் வாங்கணும்?னு தோணிருக்கலாம்.

அதனால, வங்கிகள் மக்கள்ட்ட பணம் வாங்கி உங்களுக்கு தர்றதவிட, நீங்களே டைரக்டா டீல் பண்ணிக்குங்க..னு வழி விடுது அரசு. ரகுராம் ராஜன், ராகுல் காந்திலாம் இத குத்தம் சொல்றாங்க. தமிழ் பேச தெரிஞ்ச ஒரு பெண்மணி நிதி அமைச்சரா இருக்கும்போது நாட்ல பொருளாதார புரட்சி நடக்றது அவங்களுக்கு பிடிக்கலைனு தெரியுது. 

கார்ப்பரேட் கம்பெனிகள் தொழில் தொடங்க அரசு நிலம் அளிக்குது, மின்சாரம் வழங்குது, தண்ணீர் சப்ளை பண்ணுது, வரி விலக்கு குடுக்குது, தொழிலாளர் சட்டங்கள தளர்த்துது, ஊக்க தொகைகூட தருது. இதுக்கு மேல அவங்களுக்கு தேவையா இருந்தது பணம் மட்டும்தான். அதுக்கு ஒரு நல்ல வழிய காட்டும்போது அரச குறை சொல்றது நல்லாவா இருக்கு என்று கிண்டல் செய்திருக்கிறார்.