எல்லாரும் உங்க சைஸ் என்னனு பேப்பர்ல எழுதுங்க..! மாணவிகளை பதற வைத்த சில்மிஷ ஆசிரியன்!

நாமக்கல் மாவட்டம் அரசு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.புகார் அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாச வார்த்தை பேசுவதாகவும் மற்றும் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புகாரையடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சுரேஷ் 37, இவர பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதும் மாணவிகளை தொட்டு பேசுவதுமாக இருந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவிகள் ஆசிரியரின் செயல் குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் சென்று ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணையின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வட்டார கல்வி அலுவலர் பிரபுகுமார் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் மாணவிகள் கூறியதாவது நிர்வாண சிலைகளின் படத்தை மாணவிகளிடம் காட்டியதுடன் உடல் அங்கங்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் ஆசிரியர் ஆபாசமாக கூறியதாக மாணவி ஒருவர் தெரிவித்த நிலையில் சில உடல் பாகங்களை அளவெடுத்து குறித்து வரவேண்டும் என மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

மற்றும் ஆசிரியர் சுரேஷ் மாணவிகளை தரக்குறைவாக பேசியதாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் 8 மாணவிகள் கடிதம் மூலமாக புகார் எழுதி கொடுத்துள்ளனர். அதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்வி அலுவலரிடம் கேட்டபோது மாணவிகள் கொடுத்த எழுத்துபூர்வமான புகாரை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும்வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளின் புகார் குறித்து ஆசிரியர் சுரேஷிடம் விசாரித்தபோது தான் காவல் நிலையத்தில் இருப்பதால் எதுவும் கூற இயலாது என்றும் எதுவாக இருந்தாலும் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை இந்த மாதிரியான செயலில் ஈடுபடுவது அனைவரையும் முகம் சுழிக்க செய்கிறது. மேலும் மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.