கண் இமைக்கும் நொடி! அலேக்காக செல்போனை ஆட்டைய போட்ட இளைஞன்! ஆனால்..? நாமக்கல் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வாடிக்கையாளர் போல் வந்த இளைஞர் ஒருவர் செல்போன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே எதிர்மேடு பகுதியில் ஒர செல்போன் கடை உள்ளது. கடையில் செல்போன்கள் சில காணாமல் போய்விட்டதாக அதன் உரிமையாளர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

செல்போன் கடையின் உரிமையாளர் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் டிப் டாப்பாக சில இளைஞர்கள் கடைக்குள் நுழைகின்றனர். ஒரு இளைஞர் ஒவ்வொரு செல்போனை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

அவருக்கு உரிமையாளர் விளக்கம் அளிக்கும் அதே நேரத்தில், இன்னொரு இளைஞர் அங்கிருந்த ஒரு செல்போனை எடுத்து மறைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். இதை அடுத்து அந்த இளைஞர் யார் என போலிசார் விசாரித்து வருகின்றனர். விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதுகாப்பிற்காவது ஒரு ஊழியரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்.

சம்பளம் மிச்சமாகும் என கருதி செல்போன், நகை கடைகளில் அஜாக்கிரதையாக இருப்பதால் இதுபோன்ற விலை மதிப்பில்லாத பொருட்கள் திருடு போகின்றது.