ஒரு சாதாரண வழக்கில் சிக்கிய அருப்புக்கோட்டை நிர்மலா தேவி, இன்று மன அழுத்தத்துக்கு ஆளாகி, பைத்தியம் போல் பிதற்றி வருகிறார். சி.பி.ஐ. வழக்கு கேட்கும் அளவுக்கு அவரது வழக்கு முக்கியத்துவம் பெற்று, வீணாகி வருகிறது.
நிர்மலா தேவியை இயக்குவதே நக்கீரன் படைதான் தெரியுமா..?
நிர்மலா தேவிக்கு ஏன் இந்த நிலைமை என்று பார்த்தால், அவரை முழுக்க முழுக்க இயக்குவது நக்கீரன் படை என்றுதான் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு இதழிலும் வேண்டுமென்றே நிர்மலா தேவி பற்றி செய்திகளைப் போட்டு, அவரை ஒரு மாபெரும் இயக்கம் போன்று மாற்றினார்கள். கவர்னருக்கு எதிராக செயல்படுவது போன்று நினைத்து, நிர்மலா தேவிக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.
இப்போது நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இப்போதும் நிர்மலா தேவையை நக்கீரன் நிருபர்கள்தான் இயக்கி வருகிறார்கள். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது தியானத்தில் உட்கார வேண்டும், மனநிலை தவறியது போன்று செயல்பட வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்களாம்.
குடும்பம் இல்லாமல், ஆதரவுக்கு ஆட்களும் இல்லாமல் தடுமாறும் நிர்மலா தேவி போன்றவர்களை நிம்மதியாக இருக்க விடாமல், இவர்கள் பத்திரிகை விவகாரத்துக்காக மீண்டும் மீண்டும் துன்புறுத்தி வருகிறார்கள் என்று நிர்மலாவின் உறவினர்கள் வருத்தப்படுகிறார்கள்.
நிர்மலாவை நிம்மதியா விடுங்கப்பா