விசாரணைனு சொல்லி அந்த இடத்தில் தொட்டார்..! போலீஸ்காரர் மீது சிறமி கூறிய பகீர் புகார்! பிறகு அரங்கேறிய சம்பவம்!

நாகை மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


நாகை புத்தகரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்ப பிரச்சனை தொடர்பாக நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக நன்னிலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அய்யாசாமி என்ற காவலர் செந்தில்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது செந்தில்குமார் வெளியில் சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரின் மகன், மகள் இருந்தனர்.

சிறுமியை பார்த்தவுடன் சபலம் அடைந்த காவலர் சிறுவனுக்கு பணம் கொடுத்து கடைக்கு அனுப்பிவிட்டு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நன்னிலம் போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.

அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த காவல்துறை காவலர் அய்யாச்சாமியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.  

இதற்கிடையே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவலர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் எனவே பாலியல் தொல்லை கொடுத்த காவலர் அய்யாசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அய்யாச்சாமி மீதான புகாரை விசாரிக்குமாறு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீசில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

பின்னர் சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் காவலர் அய்யாசாமியை போலீசார் கைது செய்தனர்.