முதலில் 25 வயது சந்தோஷ்..! பிறகு 36 வயது கண்ணன்..! 15 வயது சிறுமியை ஆடைகள் இல்லாமல் வீடியோ எடுத்து 2 பேரும் செய்த பகீர் செயல்!

நாகை மாவட்டத்தில் சிறுமியை சீரழித்து அதை வீடியோவும் எடுத்து மிரட்டிய வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் அதே பகுதியில் 15 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார் சந்தோஷ். பின்னர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை ரகசியமாக வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ சந்தோஷ் தனது நண்பர் கண்ணன் என்பவரிடம் காமிக்க, அவரும் அதை வைத்து சிறுமியை மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதை அடுத்து பயந்து போன சிறுமி, பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சந்தோஷ், கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.