கெட்ட வார்த்தை தனசேகரை கைது செய்ய நாம் தமிழர் புகார் மனு! அப்போ சீமானை என்ன செய்வதாம்?

நாம் தமிழர் இயக்கத்தில் எப்பேர்ப்பட்ட தம்பிகள் எல்லாம் இருக்கிறார்கள் என்று தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், ஆடியோ வெளியிட்ட தனசேகர் மீது நாம் தமிழர் இயக்கத்தின் வழக்கறினர் பாசறை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் புகழேந்தி மீது எந்தப் புகாரும் கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.


இந்த நிலையில் சிலம்பரசனிடம் பேசுவதாக இன்னொரு நாம் தமிழர் ஆடியோ வந்திருக்கிறது. அந்த ஆடியோவில் பெரியாரை முடிந்த அளவுக்கு கேவலப்படுத்துகிறார்கள். பெரியாரைத் திட்டினால் கோபம் வரும் என்று திட்டி, கெட்ட வார்த்தைகளை மீண்டும் அரங்கேற்றம் செய்கிறார்கள். இந்த ஆடியோவில் ஏகப்பட்ட கொலை, கொள்ளைகள், மிரட்டல்கள் எல்லாமே வருகிறது. 

சேதுராமன் மகன், கலியபெருமாள் மகன் என்று எத்தனையோ பேர்கள் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகளுடன் வந்து விழுகிறது. சீமான் கொலை முயற்சி செய்தார் என்று தேடிவந்ததாகவும் பேசுகிறார்கள்.

இதுவரை வெளியான அனைத்து ஆடியோக்களையும் ஒன்றாக ஐ.நா. சபையில் போட்டு தமிழர்களின் மானத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை. அதை சீமான் விரைவில் செய்து முடிக்கட்டும்