மலைப்பாதை சரிவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ்! 50 பயணிகள் உயிரைக் காப்பாற்றிய டிரைவருக்கு குவியும் பாராட்டு

மைசூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சரிவில் சிக்கியது.


இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்து நகராமல் சக்கரத்துக்கு அடியில் கல்லைப்போட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார். இந்த சாகச செயலை செய்த பேருந்து ஓட்டுனரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தனியார் பேருந்து ஒன்று மைசூரில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது திம்பம் மலைப்பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்தி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் சரிவில் சிக்கி அருகிலுள்ள சுவற்றின் மீது மோதியுள்ளது.

இந்நிலையில் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஓட்டுனர் பேருந்து சேவைகள் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து திடீரென கீழே இறங்கி கட்டை மற்றும் கல் ஒன்றை எடுத்து பேருந்தின் சக்கரத்தில் அடியில் வைத்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் பேருந்து விபத்துக்குள்ளாகாமல் தடுக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் இச் சம்பவத்தை செய்த பேருந்து ஓட்டுனரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது.