கோவையில் மோதல் அபாய சிக்கல்... அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா?

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைபினர் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தாலும், அங்கே இல்லாத பரபரப்பு கோவையில் இருக்கிறது.


ஆம், இப்போது கோவையில் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்து, இஸ்லாமிய மக்களிடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கணபதி வேதம்பாள் நகரில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதேபோன்று அரசு மருத்துவமனை முன்பு இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களைக் கண்டித்து இன்று கோவையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கைது செய்யவும், இஸ்லாமியர்களை தாக்கிய விரோதிகளை கைது செய்யகோரியும் தமிழக அரசு கோரிக்கை வைத்து நடந்த போராட்டத்துக்கு அனைத்து அமைப்பினரும் ஆதரவு கொடுத்திருந்தனர். 

ஆனால், இதே விவகாரம் இந்து முன்னணி ஆட்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு முழுக்க முழுக்கவும் இஸ்லாமியர்களுக்கு துணை நிற்பதாக கொந்தளிக்கின்றனர். போராட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறை அறிவித்த பிறகும் எப்படி போராட்டம் நடத்துகிறார்கள் என்று கோபமாக கேள்வி கேட்கிறார்கள்.

முன்பு கோவையில் நடந்தது போன்று கலவரம் ஏற்படுத்த சிலர் ஆசைப்படுகின்றனர். அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை.