முஸ்லீமாக மதம் மாற வேண்டும்! கிறிஸ்டியன் தோழியை மிரட்டி பலாத்காரம் செய்த முகமது ஜெஸிம்! தந்தை வெளியிட்ட திடுக் தகவல்!

கோழிக்கோடு: இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததோடு, மதமாற்றம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கோழிக்கோடு போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''எனது குடும்பம் ஒரு கிறிஸ்தவ குடும்பமாகும். எனது மகளை (18 வயது), கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி அவளுடன் காலேஜ் படிக்கும் முகமது ஜாஸிம் (19 வயது) கடத்திச் சென்றுவிட்டான்.

கோழிக்கோட்டில் உள்ள சாரோவரம் பயோபார்க்கில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனது மகளை மயக்க ஊசி போட்டு கடத்திச் சென்ற ஜாஸிம், பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். அதனை வீடியோவாக எடுத்து, அவளை மிரட்டி வந்ததோடு, முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி மிரட்டியும் உள்ளான். இதேபோல, மேலும் பல இளம்பெண்களை அவன் மோசடி செய்துள்ளான்,'' என்று கூறியிருந்தார்.  

இந்த விவகாரம் பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலும் எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யாமல் இருந்தனர். பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஜாஸிம் போலீசில் தற்போது சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், ''இது லவ் ஜிகாத் சம்பவம் கிடையாது.

அந்த இளம்பெண், ஜாஸிமுடன் நெருங்கிப் பழகிய பிறகே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி அவரை மதமாற்ற ஜாஸிம் முயன்றாரா என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.