இப்படியா சிறுநீர் கழிப்பாய்? 7 வயது சிறுமி நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி! பிறகு நேர்ந்த பயங்கரம்!

தந்தை இல்லாத குழந்தையை அழைத்துச் சென்று படிக்க வைப்பதாக கூறி கொலை செய்த கணவன் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அனிதா தம்பதியினர், அவுரங்காபாத்தில் வசித்து வரும் தனது உறவினரின் சிறுமிக்கு தந்தை இல்லாததால் தன்னுடன் அழைத்துச் சென்று படிக்க வைத்து வளர்த்து விடுவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

தாயும் தனது மகளுக்கு நல்ல படிப்பு மற்றும் வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவ்வபோது தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்த தாய் கடந்த சில மாதங்களாக பேச முயற்சித்தும் சரியான பதில் வரவில்லை. 

இந்நிலையில் சந்தேகம் அடைந்த தாய் தனது மகள் பாரதி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது.

அதில் சிறுமி நகரத்தை முதல் முறையாக பார்த்ததால், அங்கிருக்கும் குடியிருப்புகளில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் முதலில் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் சிறுமியை கண்டித்துள்ளனர்.

சிறுமி பயத்தில் திரும்ப திரும்ப அதையே தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுமியின் நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார். அந்த சமயமே மூச்சுத் திணறிய சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை மறைக்க வாட்டர் டேங்கில் அடைத்து சிமெண்ட் கொட்டி மூடி மறைத்துள்ளனர். 

பின்னர் விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை படிக்க வைப்பதாக அழைத்துச்சென்று வீட்டு வேலைகளையும் மனைவிக்கு உதவியாக தையல் வேலை களையும் சிறுமியை செய்ய வைத்தது தெரியவந்தது.

சிறுமியை துன்புறுத்தியதற்காக மனைவி அனிதாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கணவன் பிரகாஷை தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.