ஓடும் ரயிலில் விபரீத சாகசம்..! குறுக்கே வந்த இரும்பு கம்பம்..! உடல் சிதறி பலியான இளைஞன்! அதிர வைக்கும் வீடியோ உள்ளே!

மும்பையில் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞர் மின்கம்பத்தில் அடிபட்ட உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


ரயில் செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், அஜாக்கிரதையாக இருப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரயில் அமைச்சகம் அடிக்கடி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்யும்போது மின்கம்பத்தில் அடிபட்டு கீழே விழும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. 

டிசம்பர் 26ம் தேதி மும்பையில் புறநகர் மின்சார ரயிலில் படிகட்டில் தொங்கியபடி சாகசம் காட்டிக் கொண்டே செல்கிறார். இதை ஜன்னலுக்கு அருகே ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சாகசம் செய்து கொண்டிருக்கும்போதே மின்கம்பம் ஒன்று எதிர்பாராத விதமாக இளைஞர் மீது மோதுகிறது. இதனால் நிலைகுலைந்த இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்து விடுகிறார். இந்த வீடியோ காட்சிகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் மும்பையை சேர்ந்த தில்ஷன் என்பதும் தெரிவந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவிக்கையில் ரயிலில் சாகசம் செய்ய வேண்டாம். இது சட்டவிரோதம். படிகட்டில் தொங்கி செல்வதோ, ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஏறுவதோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதோ, ரயில் வரும்போத தண்டவாளத்தை கடக்கவோ கூடாது என அறிவுத்தி உள்ளது.