மும்பை: பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை செல்ஃபோனில் படம்பிடித்த நபர் கைது செய்யப்பட்டார்.
பல நாள் மோகம்! பக்கத்து வீட்டு பெண் குளியல் அறையில் இளைஞர் செய்த விபரீதம்! பிறகு நடந்த தரமான சம்பவம்!
மும்பையின் ஓஷிவாரா அருகே உள்ள பேஹ்ரம் பாக் பகுதியை சேர்ந்தவர் சதாம் ஷெய்க். கேப் டிரைவராக உள்ள இவர், தனது அண்டை வீட்டுப் பெண் மீது நீண்ட நாளாக ஆசை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் குளிப்பதை யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் படம் பிடிக்க திட்டமிட்டார். அவரது குளிக்கும் அறைக்கும், ஷெய்க்கின் வீட்டிற்கும் இடையே உள்ள பொதுச்சுவரின் மேற்கூரைப் பகுதியில் செல்ஃபோனை ஒளித்து வைத்துவிட்டார்.
திட்டமிட்டபடி, பாத்ரூமில் குளிக்கச் சென்ற அந்த பெண், சந்தேகத்தின் பேரில் மேற்கூரையில் பார்த்தபோது, செல்ஃபோன் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, தனது கணவருக்கு அவர் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசில் புகார் தரப்படவே, குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோனை தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு, போலீசார் அனுப்பியுள்ளனர்.