பேஸ்புக் விபரீதம்! ஆபாச படங்களை வைத்து சிறுமியை மிரட்டிய வழக்கறிஞர்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

மும்பையில் சிறுமியுடன் சமூக வலைதள்த்தில் அறிமுகமாகி சிறுமியின் மார்ஃபிங் படங்களை பதிவிட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சகினாகா என்ற இடத்தைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் செதன்யா சாகர் சோனி என்றும் 25 வயதான அந்த நபர் ஒரு வழக்கறிஞர் என்றும் தெரியவந்தது. அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் டிவிட்டரில் உமர் சுல்தான் என்ற பெயரில் போலிக் கணக்கு தொடங்கியதும் அந்தக் கணக்கில் இருந்து கடந்த ஆண்டு 16 வயதுச் சிறுமிக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த் அந்தப் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது. 

அதுமுதல் இருவரும் சாட்டிங்குகளை தொடங்கிய நிலையில் பின்னர் சோனி அந்தச் சிறுமியின் படங்களை அனுப்பக் கேட்டதையடுத்து அந்தச் சிறுமியும் தனது படங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதனைக் கொண்டு அந்தப் பெண்ணின் படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து பதிவிட்டு அந்த நபர் தொடர்ந்து அந்தச் சிறுமியை மிரட்டியதாகவும் ஒரு செயலி சார்ந்த தொடர்பு எண்ணில் தன்னை தொடர்பு கொள்ள வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது  

இதனை அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தததையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த  நபர் போலி டிவிட்டர் கணக்கையும், செயலி எண்ணையும் கொடுத்திருந்ததால் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் அந்த நபரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது 

இந்நிலையில் மூன்று மாதத் தேடலுக்குப் பின் அந்த நபர் ஜபல்பூரைச் சேர்ந்த செதன்யா சாகர் சோனி என்று தெரியவந்ததையடுத்து அங்கு சென்று சோனியைக் கைது செய்தனர். அந்த நபர் மீது தகவல் தொழில்நுட்பக் குற்றப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.