திருமணமான ஆணுடன் காதல்! பிறகு இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

காதலனுக்கு திருமணமனதால் விரக்தியில் காதலி தற்கொலை முயற்சி


மும்பை: காதலனுக்கு வேறு பெண்கூட திருமணமான விரக்தியில் காதலி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புனே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர், சம்பந்தப்பட்ட பெண்ணை காதலிப்பதாகக் கூறி, கடந்த பல மாதங்களாக ஏமாற்றி பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதன்பேரில், அவரை திருமணம் செய்துகொள்ளாமல் திடீரென வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதனை தட்டிக்கேட்ட காதலியை அவர் புறக்கணித்துவிட்டார். 

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான காதலி, வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், பலத்த காயம் அடைந்த அவரை காத்கோபர் போலீசார் மீட்டு, ராஜ்வாடி ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளனர். இதுபற்றி வழக்குப் பதிந்த போலீசார் குறிப்பிட்ட இளைஞரை கைது செய்தனர். இச்சம்பவம் புனே பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.