மும்பை: வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சில நிமிடங்களில் நண்பர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
வாட்ஸ் ஆப்பில் ஜோடியாக இருப்பது போன்ற ஸ்டேட்டஸ்! அடுத்த சில நிமிடங்களில் நெருங்கிய நண்பர்களுக்கு நேர்ந்த பயங்கரம்!
மும்பையின் கண்டிவ்லி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வந்தவர்கள் சாகர் படேல் (24 வயது), அனில் வாகெலா (29 வயது). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கடன் வாங்கிய ஸ்கூட்டரில் வேகமாக பயணித்தபோது எதிரே வந்த வாகனம் மோதி, உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவர்களின் செல்ஃபோனை பரிசோதித்தபோது சில நிமிடங்களுக்கு முன்புதான் வாட்ஸ்ஆப்பில் மகிழ்ச்சியான ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்துள்ளனர். அதில், இவர்களின் புகைப்படத்துடன் கீழே, ''ஒரு நல்ல நண்பன் என்பவன் யார்? 2 உடலாக இருந்தாலும், உயிர் ஒன்றாக இருப்பவனே நல்ல நண்பன்,'' என எழுதப்பட்டிருந்தது.
இப்படி ஸ்டேட்டஸ் வைத்த சில நிமிடங்களிலேயே திருஷ்டி பட்டதுபோல, சாலை விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் உடல் பாகங்கள் முழுக்க சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளதென்று, அவர்களது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.