குடித்துவிட்டு ஆடைகளை களைந்து இளம் பெண் சலம்பல்! தட்டிக்கேட்ட பெண் போலீசாருக்கு நேர்ந்த பரிதாபம்!

மும்பையில் போதை நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட பெண், ரகளையில் ஈடுபட்டு அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்கினார்.


மும்பையின் விராரைச் சேர்ந்தவர் 29 வயது ஹிமானி சர்மா. மது அருந்திவிட்டு ஆடைகளை களைந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய ஒருவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஹிமானியை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்த போலீசார், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக பி.எம்.சி. சதாப்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 

தொடர்புடைய மருத்துவர்கள் வரத் தாமதமானதால் எரிச்சலும் ஆத்திரமும் அடைந்த ஹிமானி அங்கிருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்க்களை ஹிமானி தாக்கத் தொடங்கினார். செவிலியர் ஒருவரின் கழுத்தை ஒற்றைக் கையால் பிடித்து தலைக்கு மேல் உயர்த்தித் தூக்கிய அவர் தரையில் வீசி எறிந்தார். 

அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற பெண் பாதுகாவலரை ஹிமானி வயிற்றில் எட்டி உதைத்ததை அடுத்து அவர் பல அடிகள் அப்பால் சுருண்டு விழுந்தார். இதையடுத்து தன்னைப் பிடிக்க முயன்ற பெண் காவலரின் கையை அவர் முருக்கியதையடுத்து பெண் காவலருக்கு எலும்பு முறிவு  ஏற்பட்டது.

மேலும் மருத்துவமனையின் அந்த அறையில் இருந்த அனைத்து  சாதனங்களையும், கண்ணாடிப் பொருட்களையும் ஹிமானி அடித்து  உடைத்தார். ஹிமானி தாக்கியதில் 8 பேர் காயம் அடைந்த நிலையில் மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமானி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.