பெண் பல் மருத்துவர் ஒருவர் அவரது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்

மும்பையில் பெண் பல் மருத்துவர் ஒருவர் அவரது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 மும்பை மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 31 வயது பெண்ணான சுவாதி ஷிக்வான் என்பவர் அதே பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அனைவரிடமும் ஜாலியாக பேசும் சுவாதி  சமீப காலங்களாக  யாரிடமும் பேசாமல் ஏதோ ஒரு மன உளைச்சலின் காரணமாக அமைதியாக இருந்து வந்துள்ளார்.

அவரைக் கண்ட அவரது நண்பர்கள் உடன் பணி புரிவோர் யார் கேட்ட போதிலும்  தனக்கு ஒன்றும் இல்லை என்று மறுத்து விடுவாராம். இதையடுத்து திடீரென சுவாதியை அவரது நண்பர்கள் யாரும் பார்க்கவில்லை. அவரது வீட்டிற்கு சென்ற போதும் இந்த வீடு போட்டியை நிலையிலேயே இருந்திருக்கிறது.

இதனால் சந்தேகித்த அவரது நண்பர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த  காவல்துறையினர் அங்கேயே சுவாதி அழுகிய நிலையில் சடலமாக தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டனர். 

 பின் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வீட்டில் சோதனை மேற்கொண்ட பொழுது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

அதில் தனது சாவிற்கு நான் மட்டுமே காரணம் என்று அவர் எழுதி வைத்திருந்ததாக  விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு நில்லாமல் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணைகளை மும்பை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.