திடீரென ரயில் முன் பாய்ந்த நபர்! நொடியும் தாமதிக்காமல் பாய்ந்த போலீஸ்காரர்! பிறகு நடந்தது என்ன? பரபரப்பு சம்பவம்!

மும்பையில் ரயில் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் 64 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடைமேடையில் நின்றுகொண்டிருந்தார். திடீரென ஒரு ரயில் வந்தபோது, அவர் தண்டவாளத்தில் குதித்து, கீழே படுத்துக் கொண்டார்.  அதாவது, வேகமாக வரும் ரயில் தன் மீது ஏற வேண்டும் என்ற நோக்கில், அவர் இதைச் செய்திருக்கிறார்.

அப்போது, ரயிலும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. நடைமேடையில் இருந்த சக பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆனால், ரயில்வே போலீசார் 2 பேர் திடீரென சுதாரித்துக் கொண்டு, ஓடி வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த முதியவரை காப்பாற்றினர்.  

அதேபோல, ரயிலை இயக்கிய பைலட்டும் சாதுர்யமாக செயல்பட்டு, ரயிலை உடனடியாக நிறுத்திவிட்டார்.  இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த காட்சிகள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதனை மும்பை ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது.