முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் தனது 60 வயதில் பழைய நண்ரான ரவீண் குரானாவுடன் திருமணம் செய்து கொண்டார்.
60 வயது காங்கிரஸ் தலைவருக்கு நட்சத்திர ஓட்டலில் திடீர் திருமணம்..! மணப்பெண் யார் தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் முகுல் வாஸ்னிக் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர், மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆவார். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாக பொறுப்பை கவனித்து வரும் இவர் தனது 60 வயதை கடந்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் தனது பழைய நண்பர் ரவீண் குரானாவுடன் திருணம் செய்து கொண்டார். இவர்களின் வரவேற்பு விழா புதுடெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தை பற்றி அசோக் கெலோட் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் "இந்த புதிய பயணத்தை தம்பதியினராக ஒன்றாக இணைத்த முகுல் வாஸ்னிக் ஜி மற்றும் ரவீணா குரானா ஜி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்றும் வரவிருக்கும் ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களாக அமையட்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி மணீஷ் திவாரி அவர்கள் மேலும் ட்வீட் செய்துள்ளார். அதில் "புதிதாக திருமணமான முகுல்வாஸ்னிக் மற்றும் ரவீணா குரானா ஆகியோரை வாழ்த்துவது நஸ்னின் & ஐ.ஏ-க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்று தனதி ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.