அம்பானி கம்பெனியை 5.32 லட்சம் கோடிக்கு வாங்கும் சவூதி கம்பெனி! இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய டீல்!

சவுதி அரேபிய ஆயில் நிறுவனமான சவுதி அரம்கோ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் ரசாயன வணிகத்தின் 20 சதவீத பங்குகளை 75 பில்லியன் டாலர் நிறுவன மதிப்பில் வாங்கிறது என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் 42 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் தனது பங்குதாரர்களிடம் தெரிவித்துள்ளார்.


இந்த ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும் . ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்.    ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட,   இந்த ஒப்பந்தத்தில்  RIL மற்றும் Bharat Petroleum  நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின்  51 சதவீத பங்குகளும்  அடங்கும் என அம்பானி கூறியுள்ளார் .

அரம்கோ ஒரு நாளைக்கு 7,00,000 பீப்பாய்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு   நீண்ட கால அடிப்படையில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய இறக்குமதி நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்திய எரிசக்தி துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது ரிலையன்ஸ் குழுமம். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 2015-16ம் ஆண்டு 202.9 மில்லியன் டன் பேரல் உடன் 80.6 சதவிகிதமாகவும்.   அடுத்தடுத்த 3 ஆண்டுகளில் 226.6 மில்லியன் டன்னாக இறக்குமதியை செய்துள்ளது . 

ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்  2018-19-ம் ஆண்டுகளில் 114.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில்  இறக்குமதி செய்துள்ளது. அதில் 10.6% கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதியானது கவனிக்கத்தக்கது. ஈரானுக்கான கச்சா எண்ணெயின்  மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விற்பனை விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை முடிவு செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளன. 

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பெட்ரோலிய சந்தையின் தலைவராக உருவாகிறது. இந்திய எண்ணெய் விற்பனை சந்தையின் ஜாம்பவானாக உருவெடுக்க இருக்கும் இந்த நிறுவனம் ஏற்கெனவே  ஆட்டோமொபைல். கம்யூனிகேஷன். கல்வி. போக்குவரத்து என பல துறைகளை தன்வசம் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி