ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவியா..? கொலைவெறியில் பிரேமலதா.. அமித் ஷா உத்தரவு ஓவர்

ஒருவழியாக அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற மாநிலங்களவை வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.


அனைவரும் எதிர்பார்த்தபடி தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜி.கே.வாசன் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கண்டு அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி தே.மு.தி.க.வும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏனென்றால், தங்களுக்கு அந்த சீட் கண்டிப்பாக வேண்டும் என்று பிரேமலதா ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தார். எப்படியாவது சுதீஷை டெல்லிக்கு அனுப்பி காரியங்கள் சாதிக்க வேண்டும் என்ற தே.மு.தி.க.வின் ஆசையில் மண் விழுந்துவிட்டது.

ஜி.கே.வாசனுக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டது ஏன் என்பதுதான் அ.தி.மு.க.வின் கேள்வி. இதற்கு அத்தனை பேரும் அமித் ஷாவைத்தான் கை காட்டுகின்றனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விவகாரங்களைக் காட்டிக்கொடுப்பதற்கு ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், அதனாலே இந்த எம்.பி. சீட் கொடுக்க வலியுறுத்தி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வின் அடிமை என்பதை நிரூபித்திருக்கிறது.