ஜேம்ஸ்பாண்ட் பட வரிசைகளில் இருபத்தைந்தாவது திரைப் படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜமைக்கா நாட்டில் கடந்த 15 நாட்களாக நீடித்தது. இறுதி நாளான இன்று தான் அந்த அசம்பாவிதம் நடைபெற்றது.
படப்பிடிப்பில் ஜேம்ஸ் பாண்டுக்கு காயம்! ஷூட்டிங் நிறுத்தம்!

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் 51 வயதான டேனியல் கிரேக் நடித்து வருகிறார். தனது வழக்கமான கோட் சூட்டுடன் வேகமாக ஓடிச்சென்று வில்லனை பிடிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. போது கால் இடறி டேனியல் கிரேக் கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.
உடனடியாக டேனியல் கிரேக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.
இதனையடுத்து ஜேம்ஸ் பாண்ட் 25 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிகிச்சைக்காக டேனியல் க்ரேக் உடனடியாக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை முறைகளை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற தகவல் வெளியாகும்.