வெளிநாடு புறப்படும் எடப்பாடிக்கு அம்மா எழுதும் கடிதம்! யாருப்பா அந்த ராஜலிங்கம்? பின்னி பெடலெடுத்திருக்கார்!

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வதை ஸ்டாலின் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.


அதே நேரம், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை செமையாக கலாய்த்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் ராஜலிங்கம். எடப்படிக்கு அம்மா எழுதும் கடிதம் போன்ற அந்தப் பதிவைப் பாருங்கள்.

தம்பி முதல் முதல்ல வெளிநாடு போற ரொம்ப தூரமாம் ரொம்ப நேரம் ஆகுமாம் பிளைன்ல வச்சி சாப்பிட புளிசோறும் கெட்டி சட்னியும் கட்டி வச்சிருக்கேன் சாப்பிடு. அங்க ரோட்டை கடக்குறப்போ எதிர்ல வர வெள்ளக்காரியை வாயை பிளந்துகிட்டு பார்க்காத கார் காரன் நசுக்கி விட்ருவான்

உன் கூட அந்த விஜயபாஸ்கர் வரானாமே, வெள்ளி அன்னாக்கொடி பத்திரம்டா. நம்மூர்ல மாதிரி அந்த ஊர் டீ கடையில போன்டா திருடி தின்னுடாதே கையை வெட்டி புடுவாடுங்களாம். உன் சம்மந்தி வந்தான்னா கூட கூப்பிட்டு போகாதே அங்க வந்தும் ரோட்டுல இருக்கிற தாரை சுரண்டிகிட்டு இருப்பான் பார்க்கிறவனுங்க தப்பா நினைப்பாங்க.

ஊர் சுற்றி பார்க்க போகும்போது அம்மா போட்டோவை டவுசர்ல வச்சிட்டு மோடி போட்டோவ மேல் பாக்கெட்ல வையி, அப்பதான் ரெகுலர் கஸ்டமர் அனுப்பின ஆளுன்னு அந்த ஊரு கைடுங்க நல்லா கவனிப்பானுவ. நம்ம ஊர்ல மாதிரி யாரையும் குனிஞ்சி கீழ பார்த்து கும்பிடாத அந்த ஊர்காரனுவ மோசமான ஆளுக ஆம்பளைன்னும் பார்க்காம அள்ளிகிட்டு போயிடுவானுங்க

முதலீடு கொண்டுவரத்தான் போறேன்னு சொன்னாங்க ஒரு வெள்ளைக்கார அண்ணாச்சி கடையையும் விடாதே எல்லோரையும் நம்மூர்ல கடை வைக்க வாங்கன்னு நயமா கூப்பிடு, இன்னொரு விசயம் உனக்கு சக்கரை மூட்டையை பாத்தால் உனக்கு கை அரிக்கும் கட்டுப்பாட்டோட நடந்துக்க

மறந்தே போயிட்டேன் அந்த சொட்டத்தலையனை உன்கூட கூட்டிப்போயிடாதே ஏதாவது பொம்பள விவகாரத்தில உன்னை மாட்டி விட்ருவான், வேணும்னா அவனுக்கு பதிலா திண்டுக்கல் சீனியை கூட்டிட்டு போ அமெரிக்காவுக்கு இப்ப அதிபர் ஆபிரகாம் லிங்கன் தான் ரஷ்யாவுக்கு இப்ப அதிபர் காரசேவ்தான்னு ஏதாவது காமடி பன்னிகிட்டு வருவான்

நம்மூர்ல மாதிரியே அங்கயும் உன்னை எவனுக்கும் தெரியாது அதனால கூச்சபடாம நல்லா கடைவீதியை சுத்திபாரு சரியா டாட்டா டா மகனே.

சூப்பர்ண்ணா...