4வது மாடியில் இருந்து 3வயது குழந்தையுடன் குதித்த 33வயது பெண்! பதற வைக்கும் காரணம்!

3 வயது குழந்தையுடன் 4-வது மாடியில் இருந்து குதித்த பெண்; குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.


தெலுங்கானா மாநிலத்தில் 33 வயது பெண் ஒருவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் 4-வது மாடியில் இருந்து குதித்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

13 ஆண்டுகளுக்கு முன் திருமணமான பத்மஜா - ராமமூர்த்தி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். இந்தத் தம்பதி கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தொழில் செய்து வந்தனர். அவர்களுக்கு நிதி நெருக்கடி, கடன் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை 11 மணிக்கு குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து பத்மஜா தனது இரண்டாவது மகளை கையில் ஏந்திக் கொண்டு குதித்தார். பத்மஜா குதித்து கீழே விழுவதும் அப்போது ராமமூர்த்தி பதறி ஓடி வந்து இருவரையும் பார்த்துக் கதறுவதும், உதவிக்கு மற்றவர்களை அழைப்பதுமான சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகியுள்ளன.

அவற்றைக் கொண்டு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.