கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்! நேரில் பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

கள்ளக்காதலை கண்டித்த மகனை, பெற்ற தாயே கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் பதாக். இவர், டெல்லியின் கிழக்கே உள்ள நியூ அசோக் நகரில் தனது தாயாருடன் அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தார். அவர்களுடன், ரவீந்தருடைய தாயின் நண்பன் என்ற பெயரில் அஜீத் என்பவரும் தங்கியிருந்தார். 

 

இந்நிலையில், டிரைவராகப் பணிபுரியும் ரவீந்தர், தொழில் நிமித்தமாக கடந்த சனிக்கிழமை நொய்டா சென்றிருந்தார். அதன்பின்னர், இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால், வீட்டின் உள்ளே, அவரது தாயும், தாயின் நண்பர் அஜீத்தும் செக்ஸில் ஈடுபட்டதை பார்த்து, அதிர்ச்சியடைந்துள்ளார். 

 

இதன்போது, 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியுள்ளது. அப்போது, எதிர்பாராவிதமாக, ரவீந்தரின் தாயும், கள்ளக்காதலன் அஜீத்தும் சேர்ந்து, ரவீந்தர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளனர். 

 

அவர் இறந்துவிட்டது தெரியாத நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவீந்தரை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டதாக, உறுதி செய்யப்பட்டது. எனினும், ஆம்புலன்ஸ் டிரைவரை ஏமாற்றிவிட்டு, ரவீந்தரை சடலத்தை தனது மகள் வீட்டிற்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்வதாகக் கூறி, அவரது தாய் எடுத்துச் சென்றுள்ளார். 

 

ஆனால், அங்கு அவரது மகள் கண்டித்து, திரும்பி டெல்லி போலீசாரிடம் சென்று சரணடையும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்போது, அவர் திரும்பி வருகையில், இதுபற்றி தகவல் தெரிந்த டெல்லி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கூட இருந்த கள்ளக்காதலன் அஜீத்தும் கைது செய்யப்பட்டார். ரவீந்தரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.