தாய்லாந்தில் 15 வயதி சிறுமி தாயானதால் பெற்றோரிடமிருந்து மறைக்க பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த சிறுமி! தோண்டி எடுத்து காப்பாற்றிய நாய்! பிறகு நேர்ந்த அதிசயம்!

தாய்லாந்தில் சிறு கிராமத்தில் 15 வயது சிறுமி தன் பெற்றோருக்கு தெரியாமல் கர்ப்பமாகி பிள்ளையும் பெற்றனிலையில் பெற்றோரிடம் இருந்து இதை மறைக்க , பச்சிளம் குழந்தையை வீட்டின் அருகே குழித்தோண்டி உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பிங் பாங் , அந்த ஊரின் ஒரு வீட்டில் வளர்க்கபட்ட செல்லபிராணி. விபத்தில் ஒரு காலை இழந்த பிங்பாங்கை அதன் நன்றி மற்றும் அன்பின் காரணமாக அதன் உரிமையாளர் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. பிங்பாங் குழந்தை புதைக்கபட்ட இடத்தை சுட்டிகாட்டி குரைத்ததும், தரையில் துளையிட்டும் காட்டியதில் சந்தேகம் அடைந்த அதன் உரிமையாளர் அந்த இடத்தை தோண்டிய போது உயிருடன் குழந்தை புதைக்கபட்டதை அறிந்து உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..
தீவிர சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிபடுத்திய பின்னர் கொடுத்த தகவலின் சிறுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பிள்ளை பெறுவதற்க்கான வயதிற்குக் கீழ் இருந்தபடியால் சிறுமி செய்வதறியாது இப்படி செய்திருக்கலாம் எனவும், அவர் மிகவும் பயந்த நிலையில் இருப்பதாலும் அவருக்கு தேவையான மனநல சிகிச்சை கொடுக்கபட்டு வருகிறது.
மேலும் மீட்கபட்ட குழந்தை சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்கபடுவதற்கான பேச்சு வார்த்தை நடத்தபட்டு வருகிறது. தாய்லாந்தில் பாலியல் ரீதியான கல்வியை தடை செய்த பின்னர் சிறு வயதில் கர்ப்பமாகும் செயல்கள் அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகிவருவதும் குறிப்பிடதக்கது .