திடீரென பிறந்த இரட்டை குழந்தை! கை விரித்த கணவன்! பிஞ்சுகள் என்றும் பாராமல் மனைவி செய்த கொடூரம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறில் பிறந்து 20 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை கொன்றுவிட்டு மாயமானதாக நாடகம் ஆடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.


முசாஃபர் மாவட்டத்தில் வசீம் – நஸ்மா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. வேலை இல்லாமல் வறுமையில் வாடும் இந்த தம்பதி இரட்டைக் குழந்தை பிறந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.  

இதை அடுத்து கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி உடனடியாக வேலைக்கு சென்றால்தான் குழந்தைகளை காப்பற்ற முயும் என்றும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் மனைவி பேச்சுக்கு கணவர் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நஸ்மா கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி இரண்டு குழந்தைகளையும் அருகில் உள்ள குளத்தில் போட்டுக் கொன்றுள்ளார். பின்னர் கிராம மக்களிடம் தன்னுடைய குழந்தைகளை யாரோ திருடி சென்றுவிட்டதாக அழுதுள்ளார். இது குறித்து தம்பதி போலீசாரிடம் புகார் அளிக்க நஸ்மாவிடம் போலீஸ் துருவி துருவி கேள்வி கேட்க வேறு வழியின்றி நடந்ததை சொல்லி 2 குழந்தைகளையும் கொன்றதாக ஒப்புக் கொண்டார் நஸ்மா.

இதையடுத்து குளத்தில் 2 குழந்தைகளின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு போலீஸ் அனுப்பி வைத்தது. பின்னர் காவல்துறை நஸ்மாவை கைது செய்து சிறையில் அடைத்தது. பிள்ளைகள் வரம் கேட்டு தவமாய் தவம் இருக்கும் பெற்றோரிடம் குழந்தைகளை முறைப்படி ஒப்படைத்து இருந்தால் எங்கோ அந்த குழந்தைகள் நலமாக வாழ்ந்திருக்கும்.