22 வயது மூத்த மருமகனை கல்யாணம் செய்த மாமியார்! 37 வயதில் கன்றாவி காதல்!

பஞ்சாப் மாநிலத்தில் தனது மகளின் கணவரின் அண்ணனை மாமியார் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென சரணடைந்துள்ளனர்.


பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மகளின் கணவரின் அண்ணனை காதலித்து கரம் பிடித்துள்ளார். அவரது மகளுக்கு 21 வயதான நிலையில் அப்பெண் தன்னுடன் வேலைபார்க்கும் நபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது .இந்நிலையில் அவரது மகள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து தனது மகளின் கணவரின் அண்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என தெரிகிறது. அவருக்கு 22 வயது ஆன நிலையில் அவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பிக்கு திருமணம் ஆனதால் அவரைப்பார்க்க அடிக்கடி மாமியாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். 

 இந்நிலையில் மாப்பிள்ளையின் அண்ணன் மீது மாமியாருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருபுறமாக காதலித்து வந்ததாக தெரிகிறது இதையடுத்து அப்பெண் தனது கணவருக்கு தெரியாமலேயே நீதிமன்றத்தில் விவாகரத்து பெற பதிவு செய்துள்ளார்.பின்னர் விவாகரத்து வந்தபிறகு அந்த இளைஞனுடன் மாமியார் ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவர்களை வீட்டுக்குள் சேர்க்கக்கூடாது என சண்டையிட்டுள்ளனர்.இதையடுத்து காதல் ஜோடி இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்துள்ளனர்.நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் எனவும் முறையாக தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டதாகவும் அப்பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது சொந்த மகளின் கணவரின் அண்ணனை மயக்கி மாமியார் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.