மகளை விட்டு பிரிய மனமில்லை..! 5 வயது மகள் சடலத்துடன் 1 வாரம் தங்கியிருந்த தாய்! பகீர் சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த 5 வயது மகளின் உடலை ஒரு வாரம் போர்வையில் மறைத்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் 27 வயதான பெண்மணி பிரிசில்லா டோரஸ். இவருடைய 5 வயது மகள் சைரா பட்டினோ சில நாட்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதை அடுத்து பிரிசில்லாவை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையில் முதலில் மகள் ஆசிட் குடித்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்த பிரிசில்லா பின்னர் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மகள் தீக்காயம் அடைந்ததற்கு காதலனே காரணம் என மற்றொரு அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.

தீக்காயம் ஏற்பட்ட மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் ரகசிய காதலன் பற்றி கூறவேண்டி இருக்கும் என்பதால் வீட்டிலேயே இருந்ததாக குறிப்பிட்ட அவர் தீக்காயத்திற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்ததால் மகள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் மகளை விட்டு பிரியாமல் அவளது உடலை வீட்டில் போர்வையில் மறைத்து வைத்ததாகவும் ஆனால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகி வந்ததால் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதாகவும் பிரிசில்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

எனினும் பிரிசில்லா சொல்லும் காரணங்கள் முன்னுக்குபின் முரணாக இருப்பதால் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகே 5 வயது சிறுமி உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என டெக்சாஸ் போலீஸ் தெரிவித்துள்ளது. தற்போது விசாரணைக் கைதியாக பிரிசில்லா அங்குள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.