நியூயார்க்: மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு தானம் அளிக்கப்பட்டன.
நாலாவது குழந்தை பெற்றதும் மூளையில் ரத்தக்கசிவு..! 12 பேருக்கு வாழ்வு கொடுத்து மூளைச்சாவு அடைந்த அமெரிக்கப் பெண்!

ஓரிகானில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியை சேர்ந்தவர் கத்லீன் தோர்சன், கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஏற்கனவே, இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், 4வது குழந்தையும் நல்ல முறையில் பிறந்தது. பிறகு, அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதன்பேரில் மீண்டும் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட கத்லீனுக்கு, பலவிதமான அறுவை சிகிச்சைகளை டாக்டர்கள் செய்தனர். எனினும் அவரை காப்பாற்ற இயலவில்லை.
கத்லீன் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அவர் ஏற்கனவே உடல் உறுப்பு தானத்திற்கு விருப்பம் தெரிவித்து, தனது பெயரை பதிவு செய்திருந்தார். இதையேற்று மருத்துவர்கள் கத்லீனின் உடல் உறுப்புகளை, 12 நோயாளிகளுக்கு பிரித்து வழங்கினர். ஒரு பெண், 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம், நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கத்லீனின் கடைசி ஆசை நிறைவேறியுள்ளதாக, அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.