அம்மா இது தான் டயலாக்..! அதுக்கு அப்டியே பேசுவியா? மகனை புற மண்டையில் போட்ட தாய்! வைரல் வீடியோ!

செல்போனில் மற்றவர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதற்காக டிக் டாக் செய்த இளைஞரை அவரது தாயே சரமாரியாக அடிக்கும் நகைச்சுவை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


சமீபத்தில் வெளியான டிக் டாக் வீடியோக்களில் ஒன்றில் இளைஞர் ஒருவர் தன் தாயிடம் சென்று அடியே அருந்ததி என அவரது கூந்தலை பிடித்து இழுக்கிறார். அப்போது அவர் ''யாரை மரியாதை இல்லாமல் பேசுற'' என அந்த இளைஞரை தலையிலேயே அடித்து துவைக்கிறார். பிறகு தாயிடம் மன்னிப்பு கேட்ட இளைஞர் இது சினிமா வசனம்தான் எனக் கூற, அதற்காக பெற்றத் தாயை மரியாதை இல்லாமல் பேசலாமா என மீண்டும் அந்த இளைஞரை புரட்டிப் போடுகிறார் அந்தத் தாய்.

இந்த நகைச்சுவையான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பார்த்து நெட்டிசன்கள் ரவித்து வருகின்றனர். இன்றைய இளைஞர்களுக்கு டிக் டாக் என்பது அவர்களது வாழ்கை சூழலோடு ஒன்றிப் போன ஒன்று. இதனால் நிறைய இளைஞர்கள் தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்துவதை குறைத்து செல்போனில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

டிக் டாக் செயலியால் கேடு எனவும் குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தது. பெண்களும் அதிகம் பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்ட சிறிது காலம் நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு தடை போட்டிருந்தது. பின்னர் தடை நீக்கப்பட்டது. தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் செயலியில் இடம்பெறாது டிக் டாக் உறுதி அளித்த நிலையில் டிக் டாக் செயலி மீண்டும் அனுமதிக்கப்பட்டது.