டெல்லி: வீட்டில் தனியாக இருந்த தாய், மகன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
36 வயது விதவைப் பெண் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம்..! உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நபர் தனது அண்டை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், அந்த வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆம், வீட்டின் உள்ளே, இளம் வயது பெண்மணி ஒருவரும், சிறுவன் ஒருவனும் இறந்து கிடந்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், இறந்தவர்களின் பெயர் பூஜா (36 வயது), ஹர்ஷித் (12 வயது) என தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக பூஜாவின் கணவன் இறந்துவிட்டாராம். இதனால், மகன் ஹர்ஷித்துடன் தனியாக வசித்து வந்த பூஜா, கொடூரமாக, கொலை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.