தாய் - மகள் இடையே சண்டை! தலையிட்டு வளர்ப்பு நாய்கள் செய்த குரூரம்! துடிதுடித்த தாய்! திகைத்து நின்ற மகள்!

இங்கிலாந்தில் சிறுமியை அவரது தாய் அடிப்பதை பார்த்த நாய்கள் கோபத்தில் தாயை கடித்து கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.


இங்கிலாந்தில் எலைன் ஸ்டான்லி என்பவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் வீட்டு பாதுகாப்புக்காக 2 அமெரிக்கன் புடாக் வகையை சேர்ந்த நாய்களை வளர்த்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று ஸ்டான்லிக்கும் அவருடைய மகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுள்ளது. இதனால் மகளை தாய் கண்டிப்பதற்காக அடித்துள்ளார். இதைப் பார்த்த நாய்கள் அந்த சிறுமிக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து ஸ்டான்லியை கடித்து குதற ஆரம்பித்தன. 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஒரே சாலையில் ஓடிவந்து யாராவது உதவி செய்யுங்கள் என கூச்சலிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தார் நாய்கள் மீது கற்களை வீசி அப்புறப்படுத்த முயன்றனர். அந்த பெண்மணியை கடித்து குதறிய நாய்கள் உடலில் இருந்து வெளியில் வந்த ரத்தத்ததை சுவைக்க ஆரம்பித்து விட்டன.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இரண்டு நாய்களில் ஒன்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். பின்னர் ஸ்டான்லி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் எலைன் ஸ்டான்லி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது எலைன் ஸ்டான்லி புகைப்படமும், நாய்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

வளர்ப்பது சொந்த நாயாக இருந்தாலும் வீட்டில் சண்டைகள் நிகழும்போது பாதிக்கப்படுபவரை காப்பாற்றுவதாக நினைத்து அடிப்பவர் மீது பாய்ந்து விடுகிறது செல்லப்பிராணிகள். செல்லப்பிராணிகள் தங்களது பாசத்தை வெளிப்படுத்துவது சில சமயங்களில் விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது.