நட்சத்திர ஓட்டல் சொகுசு அறையில் 3 பெண்களால் தொழில் அதிபருக்கு நேர்ந்த விபரீத சம்பவம்! போலீசாரே அதிர்ந்த பரிதாபம்!

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக கூறி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாய் மகள் உள்ளிட்ட மூவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்


டெல்லி ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி அனுராதா கபூர் என்ற பெண்ணும் அவரது தாய் மோலியும் சிங்கி என்ற மற்றொரு பெண்ணும் ஒரு புகார் அளித்தனர். அதில் ராஜேந்திர வியாஸ் என்ற நபர் அனுராதாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தன்ர். இது தொடர்பாக கடந்த 29ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி ராஜேந்திர வியாஸ் டெல்லி கிரேட்டர் கைலாஷ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அனுராதா கபூரும் அவரது தாய் உள்ளிட்டோரும் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்தார். அவர்கள் தன்னுடன் நன்றாக பேசியதை தொடர்ந்து அவர்களை தான் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும் பிறகு ஒரே அறையில் தங்கியதாகவும் வியாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அனுராதா கபூர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க 15 லட்சம் ரூபாய் தருமாறும் அவர்கள் மிரட்டல் விடுத்ததாக வியாஸ் கூறியிருந்தார். அவர்கள் மிரட்டலுக்கு பணிந்து தான் ஏற்கனவே ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் எஞ்சிய பணத்தை 29-ஆம் தேதிக்குள் கொடுக்குமாறு அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் 

இதனிடையே அனுராதா கபூரிடம் செல்போனில் பேசிய ராஜேந்திர வியாசின் நண்பர் கிஷோர் தங்கள் உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்து விட்டார். அதுவும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்கள் கூறியபடி பணத்தை கொடுக்குமாறு போலீசார் தெரிவித்தனர் அதன்படி ராஜேந்திர வியாஸ் பணத்தை அந்த பெண்களிடம் கொடுத்த போது போலீசார் கையும் களவுமாக பிடித்து அவர்களை கைது செய்தனர்.