தனிமையில் தவிக்கவிட்டுச் சென்ற கணவன்..! 6 வயது மகளுடன் 33 வயது மனைவி நடு வீட்டில் செய்த பகீர் செயல்! நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

கணவர் பிரிந்த சென்றதால் விரக்தியில் இருந்த பெண் குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.


திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த தேவேந்திரன், அருள்மொழி தம்பதி திருப்பூர் அருகே போயம்பாளையத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருமே பனியன் கம்பெனி தொழிலாளர்கள். இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன், கீர்த்தி என 2 குழந்தைகள் உள்ளனர்.  

கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டு தேவேந்திரன் பிரிந்து சென்று விட்டார். 2 குழந்தைகளுடன் அருள்மொழி வசித்து வந்த நிலையில் மூத்தமகன் கோகுல கிருஷ்ணன் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அருள்மொழி வீட்டில் ஏதோ சந்தேகப்படும் நிலையில் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது அருள்மொழி தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் குழந்தை சிறுமி கீர்த்தி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் குழந்தை கீர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாக கூறினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருள்மொழி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.