தமிழகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொரோனா விதிமீறல்- பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னொட்டி தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாகக் கூறி பொதுமக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதேபோல சிஏஏ வுக்கு எதிராக போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றைத் தவிர மற்றவை ரத்து செய்யப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.