ஆஸ்ரேலிய நாட்டில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டில் மலைப்பாம்பு ஒன்று தனது பசிக்கா உடும்பை விழுங்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டின் சுவரில் ஏறிய உடும்பு..! மேலே இருந்து லபக் என கவ்விய பாம்பு! மயிர் கூச்செறியச் செய்யும் சம்பவம்!
ஆஸ்ரேலிய நாட்டில் குவின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முதியோர் கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பகுதியில் ஒரு மலைப்பாம்பு ஒன்று தனது பசிக்கு இரையாக உடும்பை விழுங்கி உள்ளது. மலைப்பாம்புவினால் உடும்பை முழுவதும் உண்ண முடியதால் பாதி அளவு விழுங்கி உள்ளது.
இதற்கிடையில், உடும்பு மிகவும் பலம் மிக்க உயிரினம் அது எதை பிடித்தால் அவ்வளவு எளிதில் விடாது, அப்படிபட்ட உடம்பையை இந்த மலைப்பாம்பு விழுங்கி உள்ளது என்பது அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீட்டில் வசிக்கும் நபர் இந்த காட்சிகளை படம் பிடித்து உள்ளார்.
அதை இணையத்தில் பதிவு செய்து உள்ளார். இந்நிலையில், இந்த மலைப்பாம்பு உடம்பை விழுங்கம் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உணவிற்குகா காட்டில் இருந்து வனவிலங்குகள் இப்படி கிராமத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.