மோடி தான் கிறிஸ்தவர்களை ரட்சிக்கப் போகிறார்! மோகன் சி லாசரஸ் பலே பல்டி!

தேர்தலுக்கு முன்பு இறை போதகராக கருதப்படும் மோகன் சி.லாசரஸ் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் வைரல் வீடியோவாக வலம் வந்தன. அந்த வீடியோவில், இயேசுவை எல்லோரும் ஜெபிக்கணும், நமக்காக இயேசு புதிய ஆட்சியை மலரச் செய்யப்போகிறார்.


மோடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இயேசு சம்மதம் தெரிவித்துவிட்டார் ஆனால், நீங்கள் அனைவரும் நன்றாக ஜெபிக்க வேண்டும் என்று பேசிவந்தார். மோகன் சி.லாசரஸ் மட்டுமில்லாமல், ஒவ்வொரு இறை போடகரும், சர்ச் பங்குத்தந்தைகளும் வெளிப்படையாகவே ஆட்சி மாற்றத்துக்காக பிரார்த்தனை செய்தார்கள். எல்லோரும் பா.ஜ.க. கட்சிக்கு எதிராக வாக்கு போடுவோம் என்று வாக்கு கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றார்கள். 

அதேபோன்று, இஸ்லாமியர்களும் அனைத்து மசூதிகளிலும் மோடிக்கு எதிராகவே பிரசாரம் செய்தார்கள். ஆனால், என்ன செய்வது இயேசு மோகன் சி.லாசரஸ் பிரார்த்தனையை ஏற்க மறுத்தது போலவே, அல்லாவும் இஸ்லாமியர் கோரிக்கையை மறுத்துவிட்டார்.

வழக்கத்தைவிட மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் மோடி ஆட்சிக்கு வந்துவிட்டார். உடனே கிறிஸ்தவர்களுக்கு குறிப்பாக மோகன். சி.லாசரஸ்க்கு பயம் வந்துவிட்டது. எந்த நேரத்தில், என்ன பிர்ச்னை வருமோ என்று பயந்தவர், சட்டென்று மோடிதாசன் ஆகிவிட்டார். இப்போது அவர் வெளியிட்டிருக்கும் ஓரு வீடியோவைப் பாருங்கள்.

இனிமேல் நமக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கும் மோடியும்தான் பிரார்த்தனை செய்ய உதவப் போகிறார்கள். இந்துக்கள்தான் நம்மை காக்கப் போகிறார்கள் என்று டோட்டலாக சரண்டர் ஆகியிருக்கிறார். இவரது அசத்தலான பல்டியைப் பார்த்து இயேசுவே மலைத்துப் போயிருப்பார் என்பது உறுதி.