சட்டசபையில் மூச்! ஸ்டாலினுக்கு மோடி மிரட்டல்!

ஜூலை மாதம் ஆட்சி மாற்றம் நடக்கப்போகிறது என்ற ஸ்டாலின் கனவு மீண்டும் மண்ணாகிப் போய்விட்டது. ஆம், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கூட கொண்டுவரும் எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லையாம்.


சபாநாயகர் இனத்துக்கு நாம் துரோகம் செய்துவிடுவோம் என்று தி.மு.க. சொல்லி, தீர்மானத்துக்கு யோசிக்கிறது என்பது உண்மை இல்லையாம். ஆம், சமீபத்தில் டெல்லியில் இருந்து ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு அழைப்பு போயிருக்கிறது.

ஸ்டாலின் காங்கிரஸ்க்கு ஆதரவாக இருந்த நேரத்தில், அவ்வப்போது பா.ஜ.க.விடம் நீங்கள் பேசி வந்தீர்கள். அதனால் இப்போது உங்களிடம் கூப்பிட்டு தகவல் சொல்கிறோம். தமிழக அரசுக்கு எந்த சிக்கலும் இல்லாத வகையில் சட்டசபை நடக்க வேண்டும் இல்லையென்றால், என்ன நடக்கும் என்று சொல்ல மாட்டோம் என்று மிரட்டி அனுப்பினார்களாம்.

உடனே மாமாவிடம் வந்து புலம்பியிருக்கிறார் சபரீசன். அம்புட்டுத்தான். அதனால்தான் எங்கள் இலக்கு ஆட்சி மாற்றம் மட்டும்தான், சபாநாயகர் மாற்றம் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார் ஸ்டாலின். அதேபோன்று சமீபத்தில் தேர்வான எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்றே நினைக்கிறார்கள். கருணாஸ் உள்ளிட்ட மூவரும் ஸ்டாலினுக்கு உதவ மறுத்துவிட்டார்கள். அதனால், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலின் முடிவு எடுத்துவிட்டாராம்.

ம்... 2021ல ரஜினி வர்றதா சொல்றாங்க... ஸ்டாலின் நிலைமை பரிதாபம்தான்.