கொரோனா தொற்று காரணமாக தமிழகம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 7,000 கோடி ரூபாய் கொரோனா பாதுகாப்புக்காக தமிழக அரசு செலவழித்துள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி.யில் தமிழகத்துக்கு வரவேண்டிய தொகையை இதுவரை மத்திய அரசு வழங்கவே இல்லை.
தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்கவேண்டும்! மோடிக்கு எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம்.
ஆகவே, இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஓர் அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், கடந்த ஏப்ரல் 1, 2020 முதல் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை, மத்திய அரசு இன்னமும் விடுவிக்காமல் உள்ளது.
இதுவரையிலும் சுமார் 12,250 கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை மத்திய அரசு தமிழகத்துகு வழங்கவேண்டியிருக்கிறது. கொரோனா பேரிடர் காரணமாக தமிழக அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவை எதிர்கொண்டுள்ளது.
எனவே, தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இனியாவது, மத்திய அரசு தமிழகத்துக்குரிய பங்கை வழங்குமா?