மோடிக்கு வருசத்துக்கு ஒருமுறை மம்தா அனுப்பிவைக்கும் ரகசிய பரிசு!

மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு இன்னமும் நண்பர்களாக உள்ளனர் என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ளது. இதையொட்டி, அவரை ஒரு சிறப்பு பேட்டி எடுக்க ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தீர்மானித்தது. இதன்பேரில், மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்தார். அப்போது பல சுவாரசியமான கேள்விகளை அக்‌ஷய் குமார் கேட்க, மோடி பதில் அளித்தார். இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தனக்குள்ள நட்பு பற்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் சில விசயங்களை தெரிவித்தார். 

அதில், ''களத்தில் என்னை தீவிரமாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்றளவும் நெருங்கிய நண்பராக உள்ளார். எனக்கு ஆண்டுதோறும் ஒன்று அல்லது 2 முறை தவறாமல் அவர் குர்தா பரிசு அனுப்புவது வழக்கம். மேலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா எனக்கு அவ்வப்போது பெங்காலி ஸ்வீட்களை அனுப்பி வைப்பார்.

இதுபற்றி தெரியவந்ததும், மம்தா பானர்ஜியும் பெங்காலி ஸ்வீட்களை அனுப்புவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது பல பேருக்கும் தெரியாத ஒரு விசயம். மேலும், நான் சிறு வயதிலேயே  வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். இதனால், அவர்களை பிரிந்து வாழ்வதாக எனக்கு எந்த வருத்தமும் ஏற்பட்டது கிடையாது. நான் தெரிந்தேதான் இப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொண்டேன்,'' என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.