இந்தியா முழுவதும் கொடி கட்டிப் பறக்கும் மோடியின் முதலை கதை காமெடி! என்ன, ஏன் தெரியுமா?

நம்மூரில் ஸ்டாலின் அவ்வப்போது மீம்ஸ்காரர்களுக்கு தீனி போட்டு வருகிறார் என்றால், மோடி டெல்லியில் அவ்வப்போது எதையாவது பேசி மாட்டிக்கொள்வார்.


இதற்கு ரேடார் விவகாரமே சாட்சி. இப்போது மீண்டும் ஒரு விவகாரத்தில் மாட்டி, நாடெங்கும் மீம்ஸ் அள்ளித் தெறிக்கிறது. தொலைக்காட்சியில் பியர் கிரில்ஸ்சுடன் காட்டுக்குள் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி முழுக்க முழுக்க நகைச்சுவைதான். ஏனென்றால், அதில் மோடி இந்தியில்தான் பேசுகிறார். பியர் கிரில்ஸ்க்கு இந்தி தெரியாது.

இந்த நிகழ்வின்போது மோடி பேசிய ஒருவிவகாரம்தான் செம காமெடி வைரலாக மாறியிருக்கிறது. ஆம், குளித்துவிட்டு வரும்போது ஆற்றில் இருந்து குட்டி முதலையை பிடித்துக்கொண்டு வந்துவிட்டாராம். அதை பார்த்த மோடியின் தாய் சொன்ன பிறகே, அது முதலை என்று தெரிந்து ஆற்றில் கொண்டுபோய் விட்டாராம்.

இதை நம்பமுடியாமல் பியர் கிரில்ஸ் பார்க்க, இது நடந்தது உண்மை என்றுசொல்ல, உடனே அவரும் நம்பிவிடுகிறார். அதுசரி, இல்லைன்னா பேட்டா கிடைக்காதே. இந்த விவகாரத்தை வைத்துத்தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸ் போட்டு வருகிறார்கள். எப்படியோ இந்தியர்களை ஜாலியா வைச்சுக்க மோடியும் என்னென்னவோ பண்ணிக்கிட்டுத்தான் இருக்கார்.