ஹிந்தி படிச்சா மாதம் ஆயிரம் ரூபா தருவாரா மோடி? தமிழன் ரெடி

இந்தி மூன்றாவது மொழியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு ஏன் தமிழக அரசியல்வாதிகள் இப்படி கொந்தளிக்கிறார்கள் என்பது இன்றைய இளைய தலைமுறையினர் யாருக்கும் புரியவில்லை.


தமிழகத்தில் எழுந்திருக்கும் பெரும் எதிர்ப்பைக் கண்டு உடனடியாக மத்திய அரசு பின் வாங்கியுள்ளது. அதன்படி மும்மொழித் திட்டத்தில் ஒரு திருத்தம் செய்துள்ளது. அதாவது இந்தி கட்டாயம் இல்லை என்று அரசு சொல்லிவிட்டது.

ஒரு கமிட்டி கொடுத்திருக்கும் அறிக்கை இன்னமும் அமல்படுத்தப்படாத நிலையில், அந்த கமிட்டி அறிக்கையில் எப்படி திருத்தம் மேற்கொள்ள முடியும் என்று தி.மு.க. கட்சியினர் எதிர்க் குரல் கொடுத்து வருகின்றனர். ஏதேனும் வகையில் இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் ஆசை என்கிறார்கள்.

இந்த நேரத்தில் எப்படியாவது தமிழனை இந்தி படிக்க வைக்க வேண்டும், அதற்கு என்ன வழி என்று பா.ஜ.க. மேலிடம் தமிழக பா.ஜ.க.விடம் கேள்வி கேட்டிருக்கிறதாம். அதற்கு தமிழக பா.ஜ.க. சொல்லியிருக்கும் பதில்தான் அசத்தல். தமிழர்கள் எல்லாவற்றுக்கும் பணம் கேட்டு பழகிவிட்டார்கல். அதனால், மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி கொடுத்தால் ஹிந்தி படிக்க வைக்கலாம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்லாம். ஆஹா, நல்ல யோசனைய ஐருக்குதே என்று பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

எப்படியோ, தமிழர்களுக்கு மாசம் ஆயிரம் ரூபாய் குடுங்க மோடி, நாங்க ஹிந்தி படிக்கிறோம்.